வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2015 (13:33 IST)

மகனை ஏன் நடிகனாக்கினேன்? - டெல்லி கணேஷ் பேட்டி

திரைப்படங்களில் நாயகன், நாயகியின் தந்தையாக நடித்து வந்த டெல்லி கணேஷ் இப்போது உண்மையாகவே நாயகனின் தந்தையாகியிருக்கிறார்.

டெல்லி கணேஷின் மகன் மகா(தேவன்) என்னுள் ஆயிரம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். மகனின் அறிமுகப்படத்தை டெல்லி கணேஷே தயாரிக்கிறார். படம் குறித்தும் மகன் குறித்தும் பேசினார் டெல்லி கணேஷ்.


 
 
மகனை நடிகனாக்கியதற்கு என்ன காரணம்?
 
என்னுடைய மகன் படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வெளிநாடு போய் படித்து வந்தான். நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மகனின் ஆசை. என்னுடைய ஆசையை நிறைவேற்றிய நான் ஒரு அப்பாவாக அவனது ஆசையை நிறைவேற்றியிருக்கிறேன்.
 
இந்தக் கதையை நீங்கள்தான் தேர்வு செய்தீர்களா?
 
என் மகனை ஹீரோவாக்க நிறைய கதைகள் கேட்டேன். அப்போது கிருஷ்ணகுமார் என் மகனிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அந்த கதையை கேட்டேன் என் மகன் நடிப்பதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த கதை வித்தியாசமாக இருந்தது. எனவே, அதை படமாக எடுத்து என் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய நினைத்தேன்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....

தயாரிப்பாளர் ஆனது ஏன்?
 
என் மகனை வைத்து சிலர் படம் தயாரிக்க முன்வந்தார்கள். ஆனால், அவர்களே இயக்குனர்களையும் அழைத்து வந்தார்கள். இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைந்து கொண்டிருந்த போது, உங்கள் மகனை வைத்து படம் தயாரிக்கும் நீங்களே ஏன் இந்தப் படத்தை இயக்கக் கூடாது என்று மற்றவர்கள் கேட்டனர். அதனால் நானே இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். கண்ணியமான தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றுவிட்டேன். இனி என்னை வெற்றிகரமான தயாரிப்பாளராக்குவது மக்களின் கைகளில்தான் உள்ளது.


 
 
மகனின் நடிப்பு எப்படி உள்ளது?
 
படப்பிடிப்பின் போது நேரில் சென்று பார்த்தேன். அவர் சிறப்பாக நடிக்கிறார்.
 
மகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பது யார்?
 
மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த மரீனா நடிக்கிறார். இவர் தனது தாயாருடன் என் வீட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கி இருந்து நடித்தார்.
 
இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?
 
எனக்குப் பொருத்தமான கேரக்டர் இந்தப் படத்தில் இல்லாததால் நான் நடிக்கவில்லை.
 
மகனுக்கு என்ன அறிவுரை கூறினீர்கள்...?
 
நான் முதலில் நாடகத்தில் நடிக்கும் போது என்னிடம் இயக்குனர் சொன்ன வார்த்தைகளைத் தான் நான் என் மகனிடம் கூறினேன். அதாவது 'நீ முதலில் ஒரு நல்ல மனிதனாக இரு, பின்னர் நல்ல நடிகனாக மாறலாம்'.