வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 ஜனவரி 2015 (10:53 IST)

டார்லிங்கை எல்லோருக்கும் பிடிக்கும் - ஜீ.வி.பிரகாஷ் பேட்டி

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட முதல் படம் பென்சிலாக இருந்தாலும் வெளியாகப் போவது, டார்லிங். தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற பேய் படம். பொங்கலுக்கு படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் பேசியவை உங்களுக்காக.


 

டார்லிங் படத்தைப் பற்றி சொல்லுங்க...?

டார்லிங்கை பொறுத்தவரைக்கும் சென்டிமெண்டா நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த வருஷம் பிகினிங்கில் மூணு மாசம் பென்சில் பட ஷுட் நடக்கலை. என்னடா பண்ணலாம்னு, ஒரு சேஞ்சுக்கு தாடி வளர்ப்போம்னு தாடி வளர்த்தேன். அப்போ திடீர்னு ஞானவேல்ராஜா சார் கொடுத்த புராஜெக்ட்தான் டார்லிங்.

கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்...?

நான் அப்போ ஜிம்முக்கு போய்கிட்டிருந்தேன். ஜிம்முக்கு மேல ஒரு ஹோட்டல் உண்டு. அதுல சாப்பிட ஞானவேல்ராஜா வந்திருந்தார். அப்போ என்னைப் பார்த்து, என்ன தாடியெல்லாம் வளர்த்துகிட்டிருக்கீங்க, நல்லாயிருக்குன்னு சொன்னார். சரி, உங்ககிட்ட சாயந்திரம் பேசுறேன்னு சொல்லிட்டு போயிட்டார். அப்புறம், நைட்டே கால் பண்ணி, ரீமேக் ஒண்ணு பண்றேன், பண்ணலாமானு கேட்டார். கண்டிப்பா பண்ணலாம் சார்னு சொன்னேன்.

தெலுங்கு ஒரிஜினலை பார்த்தீங்களா?

தெலுங்கு படத்தை முதல்ல பார்த்திடுங்கன்னு சொன்னார். அதெல்லாம் வேண்டாம், நான் பண்றேன்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் படத்தைப் பார்த்தேன்.
மேலும் அடுத்தப் பக்கம்...

இயக்குனர் சாம் ஆணடன் பற்றி சொல்லுங்க...?
 
சாம் ஒரு படத்தை டைரக்ட் பண்ணினார். ஆனா, அதுல இருந்து அவரை தூக்கிட்டாங்க. ஆக்சுவலா சாம் ஒரு ஹார்ட் வொர்க்கர். அவரோட வொர்க்கை பார்த்துதான் இந்த புராஜெக்டை அவருக்கு ஞானவேல்ராஜா கொடுத்தார். என்னை மாதிரியே அவருக்கும் டார்லிங் ஒரு ரீ பிரேக். ஸேn, சென்டிமெண்டா வி அட்டாச் டு த புராஜெக்ட்.
 



 
நடிகரா இது உங்களுக்கு முதல் படம். எப்படி ஃபீல் பண்றீங்க...?

2006 -இல் வெயில் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரிக்கு வந்தேன். இப்போ ஒன்பதாவது வருஷம் ஆகிறது. மீடியாவோட சப்போர்ட்தான் இதுக்கு காரணம். திருப்பியும் முதல் படம் பண்றதா நினைச்சுக்குங்க. மீண்டும் உங்க சப்போர்ட் எனக்கு வேணும்.

படம் எப்படி வந்திருக்கு?

ஒரு ஃபேமிலி மாதிரி வொர்க் பண்ணியிருக்கோம். எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்.