செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 29 டிசம்பர் 2014 (12:41 IST)

கிராமத்து படம் பண்றதுதான் கஷ்டம் - டேனியல் பாலாஜி

ஐஸ்வர்யாவின் வை ராஜா வை படத்தில் வில்லனாக நடித்துள்ளார் டேனியல் பாலாஜி. சமீபத்தில் வந்த ஞான கிறுக்கன் உள்பட பல படங்களில் சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு இந்தப் படத்தில் முற்றிலும் வேறுவிதமான வில்லன் கதாபாத்திரம்.
 
வை ராஜா வை படத்தில் என்ன மாதியான வேடம்?
 
என் கேரக்டர் அஸ் யூஸ்வல் ஒரு வில்லன். 
 
மற்ற வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து என்ன வித்தியாசம்?
 
சைக்கோ வில்லன் மாதிரி இன்ட்ரஸ்டிங்கா பண்ணிகிட்டிருக்கீங்க. அது மாதிரி இல்லாம நார்மல் கமர்ஷியல் படத்துல வர்ற வில்லன், அதுவும் பைட் எதுவும் இல்லாத வில்லன் கேரக்டர் பண்ணணும்னு என்கிட்ட இந்த கதையை ஐஸ்வர்யா சொன்னாங்க.  
 
கதையும் கேரக்டரும் உங்களுக்கு பிடித்திருந்ததா?
 
எனக்கு உண்மையிலேயே ரொம்பப் பிடிச்சிருந்தது. பெர்பாமென்ஸ் பண்ற மாதிரியான வில்லன் கேரக்டர் இது. 
 
அவங்க கதை சொல்வதற்குமுன் உங்க எதிர்பார்ப்பு எப்படியானதாக இருந்தது?
 
அவங்களோட 3 படம் பார்த்திருக்கேன். அது மாதிரி கொஞ்சம் ஆஃப்பீட்டாகவோ செமி கமர்ஷியர் பார்மெட்ல ஏதோ ஸ்டோரி சொல்வாங்க போலிருக்குன்னு நினைச்சேன். ஆனா கதை ரொம்ப கமர்ஷியலா இருந்திச்சி.
 

 



ஏன்னு கேட்டீங்களா?
 
கமர்ஷியல் படம் பண்ணணும். கமர்ஷியல் டைரக்டரா வரணும்ங்கிறதுதான் என்னோட ஆசை அப்படீன்னு சொன்னாங்க. சரி, கண்டிப்பா பண்ணுவோம்னு சொல்லி பண்ணுன படம். 
 
படப்பிடிப்பு எப்படி இருந்தது?
 
 என்டர்டெய்னிங். ஷுட்டிங் ஸ்பாட்டாகட்டும், டப்பிங்காகட்டும். ஒரு டைரக்டருக்கு தேவையான எல்லா விஷயங்களும் அவங்ககிட்ட இருந்தது. ஏன்னா, ஆர்டிஸ்ட் பாயின்ட் ஆஃப் வியூவ்ல பார்க்கும்போது, என்னதான் ஆர்டிஸ்ட் நல்லா நடித்தாலும் ஒரு டைரக்டர் தனக்கு என்ன வேணும்ங்கிறதை சொல்லிகிட்டேயிருப்பாங்க. அதெல்லாம் இவங்க மிஸ் பண்ணுவாங்களோன்னு பார்த்தா அப்படியெல்லாம் இல்லை. அவங்களுக்கு என்ன வேணுமங்கிறது கரெக்டா அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. இந்த பிரேம்ல எனக்கு இவ்வளவு போதுமங்கிற தெளிவு அவங்களுக்கு இருந்தது. 
 
படம் முடிந்த பிறகு என்ன தோன்றியது?
 
பைனல் பார்க்கும் போது, இவ்வளவு ஷட்டிலா ஒரு வில்லன் பண்ணியிருக்கானா அப்படீன்னுதான் பார்த்தேன். ஆக்சுவலி எனக்கு கிளாஸி பண்றது கஷ்டமேயில்ல. கிராமத்து படம் பண்றதுதான் கஷ்டம்.