1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (11:59 IST)

போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் - தமன்னா பேட்டி

பாகுபலியின் வெற்றியால் பூரித்துப் போயிருக்கிறார், தமன்னா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்த, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படமும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த உற்சாகம் அவரது பேச்சில் தெரிகிறது.


 

 
தெலுங்கு, தமிழில் நீங்கள் நடிக்கிற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறதே...?
 
எனது படங்கள் வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் மட்டும்தான் திரை உலகில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மட்டும் நடித்தால் ‘போர்’ அடித்து விடும். எனவே என்னைப் போல் எல்லோரும் நடிக்க வேண்டும்.
 
பாகுபலி பற்றி சொல்லுங்கள்...?
 
பாகுபலி படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும், அந்த படத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயரை சொல்லி அன்புடன் அழைக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.
 
அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?
 
தெலுங்கில், பெங்கால் டைகர் என்ற படத்தில்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

நடிக்கிறேன். ரவி தேஜா ஹீரோ. சம்பத் நந்தி இயக்குகிறார். இந்தி நடிகர் பொம்மன் இரானியும் இதில் நடிப்பது முக்கியமான விஷயம்.


 

 
தமிழில்...?
 
கார்த்தி, நாகார்ஜுனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தோம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கில் தோஸ்த் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
தென்னிந்திய நடிகைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
இங்குள்ளவர்கள் திறமையானவர்கள். அதிகமும் இருக்கிறார்கள். அதனால், எந்த படத்துக்கு யார் தேவை, யார் திறமைசாலி என்பதை தெரிந்து பொருத்தமான நடிகையை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார்கள்.
 
நீங்கள் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களாகிறது. சினிமாவை முழுமையாக கற்றுக் கொண்டு விட்டீர்களா?
 
நான் இன்னும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கிறது.
 
திரையுலகில் நிலவும் போட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
போட்டி இருந்தால்தான் திறமையாக நடித்து திரை உலகில் முன்னேற முடியும். என்னுடன் போட்டி போட நிறைய நடிகைகள் வேண்டும். அதற்கு நிறைய பேர் நடிக்க வேண்டும்.