வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 17 நவம்பர் 2014 (10:34 IST)

நானும் ஒரு பிசாசு, அவனும் ஒரு பிசாசு - பாலா, மிஷ்கினின் பிசாசு பேட்டி

மிஷ்கினின் பிசாசு படத்தை பாலா தயாரிக்கிறார். இரண்டு பேருமே கொஞ்சம் எக்ஸன்ட்ரிக். பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கமான சம்பிரதாயங்கள் இன்றி கேள்விகளுக்கு பதில்களை அவர்கள் அளித்தவிதம் சுவாரஸியம். நிகழ்வுக்கு பெரும்பாலானவர் கருப்பு உடையில் வந்ததால் பேட்டி அதிலிருந்து தொடங்கியது. முதலில் பாலா.
 
பிசாசுன்னு பெயர் வச்சதாலதான் எல்லோரும் கறுப்பு ட்ரெஸ் போட்டுகிட்டு வந்திருக்கீங்களா?
 
பிசாசுன்னா கருப்பாதான் இருக்கணுமா என்ன. பிங்க் கலர் சர்ட்கூட போட்டுட்டு வரலாமே.
 
பிசாசு டைட்டிலை ஏத்துகிட்டது ஏன்?
 
நானும் ஒரு பிசாசு, அவனும் (மிஷ்கின்) ஒரு பிசாசு. இரண்டு பிசாசுகள் ஒண்ணு சேர்ந்தா பிசாசுன்னுதானே டைட்டில் வைக்க முடியும். 
 
நீங்க தாரை தப்பட்டைன்னு ஒரு படம் டைரக்ட் பண்றீங்க. அதேநேரம் பிசாசு படத்தை தயாரிக்கிறீங்க. இரண்டுமே கான்ட்ராஸnன சப்ஜெக்ட். என்ன ஃபீல் பண்றீங்க?
 
இதுல ஃபீல் பண்றதுக்கு என்ன இருக்கு. பிசாசு மிஷ்கினோட கதை. கதையை கேட்டேன். அது பிசாசா இருந்தாலும், பேயா இருந்தாலும், சைத்தானா இருந்தாலும், சனி பகவானா இருந்தாலும் கதை பிடிச்சிருந்தது, டைட்டிலும் பிடிச்சிருந்தது. டைரக்ட் பண்ணுங்கன்னு சொல்லிவிட்டேன், அவ்வளவுதான்.
 
ராம.நாராயணன் எடுத்தப் படங்களில் எல்லாமே நல்ல பேயாகதான் இருக்கும். இந்தப் படத்தில் வர்ற பேயும் அப்படி இருக்குமா?
 
ராம.நாராயணன் சார்னா பேய் படம் எடுப்பாரு, விலங்குகளை வச்சு படம் எடுப்பாருன்னு ஒரு பேச்சு இருக்கு. நீங்க பார்த்திருக்கலாம், சோறுன்னு ஒரு படம் எடுத்தார். அந்த காலத்துல பாரதிராஜா சாரும், பாலசந்தர் சாரும், மகேந்திரம் சாரும் அந்த பிரீட்ல இருந்த எல்லோருமே எடுக்க தயங்குன சுமை, பட்டம் பறக்கட்டும் மாதிரி படங்கள் அவர் எடுத்திருக்கார். ஆனா, ராம.நாராயணன் சார்னா பேய் படம், மிருகங்களை வச்சு மட்டும்தான் படம் எடுத்திருக்கார்னு தப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க.
கேள்வி என்னன்னா பிசாசில் வர்றது நல்ல பேயா, கெட்ட பேயா?
 
உங்களை மாதிரி ஒரு நல்ல பேய், நல்ல பிசாசு.
 
பாலா பேசி முடித்ததும் வந்தார் மிஷ்கின். கேள்வி அவரிடம் திரும்பியது.
 
வழக்கமான பேய் படத்துக்கும் பிசாசுக்கும் என்ன வித்தியாசம்?
 
ஒரு இறந்துபோன பெண் பேயாக மாறுகிறாள். இந்த ஒரு பேஸிக்கை மட்டும் வச்சி வேறெnரு கதைக்களத்தில் இதை எழுதியிருக்கேன். அதுக்காக இருக்கிற எல்லா பேய் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு நான் பண்ணியிருக்கேன்னும் சொல்ல முடியாது. தமிழ் சார்ந்த உறவு சார்ந்த இதயம் சார்ந்த அன்பு சார்ந்த ஒரு விஷயத்தை இந்தப் படத்துல நான் சொல்லியிருக்கேன். அதுலதான் இந்தப் படம் வேறுபடும்.
 
கதை என்ன?
 
இந்தப் படத்தோட மையக்கருத்து வேறெnரு விஷயத்தை அட்ரஸ் பண்ணுது. ஆக்சுவலா அது கிளைமாக்ஸ். அதை நீங்க படம் பார்க்கும் போதுதான் தெரியும். 
 
பேய் படம் எடுக்க என்னென்ன தயாரிப்புகள் செஞ்சீங்க?
 
நான் எழுதும் போதே இந்த மாதிரி என்னென்ன படங்கள் தமிழில் வந்திருக்கு, ஆங்கிலத்தில் என்ன மாதிரி வந்திருக்கு, உலக சினிமாக்களில் எப்படி வந்திருக்குன்னு ஸ்டடி பண்ணுனேன். கொஞ்சம் லிட்டரேச்சர் படிச்சேன். அதாவது ஹாரர் சம்பந்தமான லிட்டரேச்சர் கொஞ்சம் படிச்சேன். கோஸ்ட் ஸ்டோரிஸுக்குன்னே திரைக்கதை புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருக்கு, அதையும் படிச்சேன். திகில், பயம் அத்தோடு கொஞ்சம் ஹ்யூமரும் சேர்ந்த எல்லோருக்கும் பிடிக்கிற படமா இது இருக்கும்.