வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (15:07 IST)

அடுத்த வருட இறுதியில் பில்லா 3 அறிவிப்பு - சிம்பு

அடுத்த வருட இறுதியில் பில்லா 3 அறிவிப்பு - சிம்பு

அக்டோபர் 9 பேஸ்புக்கில் இணைந்தார் நடிகர் சிம்பு. அன்றே ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து ஒரு பிரச்சனையிலும் சிக்கிக் கொண்டார். ரசிகர்களின் கேள்விகளும், சிம்புவின் பதில்களும் இங்கே உங்களுக்காக...


 
 
படம் இயக்கும் திட்டம் இருக்கிறதா?
 
எனக்கு உண்மையிலேயே நேரம் கிடைக்கும் போது, கண்டிப்பாக இயக்குவேன்.
 
ஏன் இவ்வளவு ஸ்ட்ரைட் பார்வேர்டாக இருக்கிறீர்கள்?
 
பொய் பேசி அந்த பயத்துல சாகிறதைவிட, உண்மை பேசி பிரச்சனையை எதிர்கொள்வது நல்லது.
 
எப்போது ஸ்லிம்மான சிம்புவை பார்க்க முடியும்?
 
அஸ்வின் தாத்தாவுக்குப் பிறகு உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு.
 
தனுஷுடன் இணைந்து நடிப்பீர்களா?
 
முதல்ல நீங்க அதை ஒத்துக் கொள்வீங்களா?
 
தல படக் காட்சிகள் இப்போது உங்க படத்துல இடம் பெறுவதில்லையே...?
 
அஜித் சாரை பற்றி யாருமே பேசாத போது, அவருடைய தோல்வியடைந்த படத்தின் கட்-அவுட்டை வைத்து தல என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்தது மட்டுமன்றி அனைவருமே அவரை பெயரை உபயோகித்து வருகிறார்கள். இனிமேல் அதைப் போன்று நான் செய்ய மாட்டேன். அஜித் சாரின் வளர்ச்சியால் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
தெலுங்குப் படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா?
 
எப்போதுமே அந்த விருப்பம் உண்டு. சரியான நேரம் வரும்போது கண்டிப்பாக நடிப்பேன்.
 
யுவனைப் பற்றி...?
 
அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் யுவனின் ஒரு கில்லர்னு சொல்லலாம். ரசிகர்களைவிட நான் ரொம்பவும் எக்ஸைட்டாக இருக்கிறேன்.
 
நீங்கள் நடித்ததில் யார் உங்களின் பேவரைட் இயக்குனர்?
 
நிச்சயமாக எல்லோரும். முக்கியமாக கௌதம், ரவிக்குமார், வெங்கடேஷ், துரை, க்ரிஷ், சரவணன், தரணி, விஜய், விக்கி, ஆதிக்.
 
தமிழ் பிரேமம் ரீமேக்கில் நடிப்பீர்களா?
 
பிரேமத்தை ரீமேக் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சில கிளாசிக்குகளை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் பில்லா 3 படத்தில் நடிப்பீர்களா? எப்போது அதன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்?
 
அடுத்த வருட இறுதியில் நிச்சயமாக.
 
உங்கள் உச்சபட்ச லட்சியம் என்ன?
 
இந்த மொத்த உலகமும் ஒன்றாக சமாதானமாக இருக்க வேண்டும்.