1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (18:28 IST)

ஜீவா ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் படம் - ஆர்யா

ஜீவா படத்தின் தயாரிப்பில் கடைசி நேரத்தில் இணைந்திருக்கிறார் ஆர்யா. படத்தை வெளியிடுவது அவரது நண்பர் விஷால். நடித்திருப்பது அவரது இன்னொரு நண்பரான விஷ்ணு. இந்த நட்பு கூட்டணியின் நவரச பேச்சை கேட்பது அலாதியான அனுபவம். படம் குறித்த ஆர்யாவின் உரையாடல் உங்களுக்காக.
ஜீவா படத்தில் உங்க பங்களிப்பு என்ன?
 
ஜீவா படத்துல என்னோட பங்களிப்பு வந்து ரொம்ப மினிமம். சுசீ சார் ஜீவா படத்தோட கதையை முதல்ல த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ்கிட்ட சொல்லிதான் அப்ரூவ் பண்ணினார். அவங்க எனக்கு போன் பண்ணி இப்படியொரு கதை இருக்கு, பண்ணலாமான்னு கேட்டாங்க. நானும் ஓகேன்னு சொன்னேன். அதைத் தவிர கதை என்ன, ஷுட்டிங் எப்போ எதுவும் எனக்கு தெரியாது. இந்தப் படத்துல எனக்கு எந்த இன்வால்வ்மெண்டும் கிடையாது. ஒன்லி பைனான்ஸ் மட்டும்தான். 
 

படம் எப்படி வந்திருக்கு என்பதாவது தெரியுமா?
 
படம் நடந்துகிட்டிருக்கும் போது விஷால் எனக்கு போன் பண்ணி, செம ஸ்கிரிப்டுடா, சூப்பரா இருக்குன்னு சொன்னான். அப்படியா, எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். படம் முடிச்சப்புறம் போட்டு காமிச்சார். ரொம்ப சூப்பர்ப்பா இருந்தது, எமோஷனலா இருந்தது. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 இது எந்தவகைமாதிரியை சேர்ந்தது?
 
இது ஸ்போர்ட்ஸ் பத்துன படம். தமிழ்ல ஸ்போர்ட்ஸ் பத்தி படங்கள் கம்மி. நிறைய பேர், இந்தப் படத்தோட ரெஃபர் பண்ற மாதிரி வேற தமிழ்ப் படம் எதுன்னு கேட்டாங்க. சத்தியமா தமிழ்ல எனக்குத் தெரியலை. நான் ரெஃபர் பண்ணுனா இந்தியில், சக் தே இந்தியாவைதான் சொல்வேன். ஸ்போர்ட்ஸ் பத்துன எல்லா பிளஸ் மைனஸும் உள்ள ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் படம்.
 

விஷால் படத்தை வெளியிடுவது பற்றி...?
 
கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம்ங்கிறதால கேப்டன் இல்லாம இருக்கக் கூடாதுன்னு கேப்டனும் உள்ள வந்திட்டாரு (விஷால், செலிபிரிட்டி கிரிக்கெட் லீகில் தமிழ் நடிகர்களின் அணிக்கு கேப்டன்).  வெறுமனே விஷால் ஃபிலிம் பேக்டரின்னு பெயரை மட்டும் போட்டு பப்ளிசிட்டி ஸ்டண்டா இல்லாம, படத்தோட ரொம்ப இன்வால்வ் ஆகி விஷால் படத்தை வெளியிடுறார். 
சுசீந்திரன் குறித்து...?
 
சுசீந்திரனோட ஒவ்வொரு படமும், லவ்வா இருந்தாலும், ஆக்ஷனா இருந்தாலும் ரொம்ப யுனிக்கா, கொஞ்சம் ஸ்பெஷலா இருக்கும். அந்த மாதிரி இதுவும் மெசேஜோ‌ட என்டர்டெய்ன்மெண்டா இருக்கும். 
 

தொழில்நுட்பக் கலைஞர்கள்...?
 
இந்தப் படத்தோட பெரிய பிளஸ், படத்தில் கான்ட்ரிபியூட் செய்திருக்கிற டெக்னீஷியன்ஸ். மதி சார், இமான் சார் மாதிரியானவங்களோட வொர்க்ல வந்த அவுட்புட்தான் இந்தப் படம்.

இவங்களோட சேர்ந்து இப்படியொரு சூப்பர்ப் மூவி புரொடியூஸ் பண்ணுனதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.