1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (11:05 IST)

நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவரை காதலிப்பதாக செய்தி வரும் - அனுஷ்கா பேட்டி

அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி, ருத்ரம்மாதேவி படங்களில் அடுத்தடுத்து வெளிவருகின்றன.


 

 
இரண்டுமே அனுஷ்காவின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படங்கள். தென்னகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றிருக்கும் அனுஷ்கா அந்த பெயர், புகழுக்கு அப்பாற்பட்டவராக பேசுகிறார்.
 
ருத்ரம்மாதேவியில் ராணியாக நடித்திருக்கிறீர்கள். அப்படி நடிக்க உங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது எது?
 
ருத்ரம்மாதேவி 13-ஆம் நுnற்றாண்டில் விடுதலைக்காக பாடுபட்டவர். ருத்ரம்மாதேவி குறித்த புத்தகங்களை இயக்குனர் குணசேகரன் தந்தார். அதைப்படித்துதான் ருத்ரம்மாதேவி கதாபாத்திரத்தில் நடித்தேன்.
 
அளவுக்கதிகமான நகைகளை இந்த வேடத்துக்காக அணிந்திருக்கிறீர்களே?
 
ஆமா, கிட்டத்தட்ட 15 கிலோ நகைகள். இவற்றின் மதிப்பு மட்டும் ஐந்து கோடிகள். இதில் 3 கிலோ நகைகளை மாற்றி மாற்றி அணிந்து நடித்தேன்.
 
நிஜத்தில் நீங்கள் நகை விரும்பியா?
 
பொதுவாக எனக்கு நகைகள் பிடிக்காது. காதில் சிறிய கம்மல், கழுத்தில் சின்ன சங்கிலி, அவ்வளவுதான் அணிவேன்.
 
15 கிலோ நகைகள் அணிந்து நடித்தது எப்படி இருந்தது?
 
அழகாகதான் இருந்தது. ஆனால், சண்டைக் காட்சிகளில் அந்த நகைகளுடன் நடிக்க சிரமப்பட்டேன்.
 
ருத்ரம்மாதேவியில் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்...?
 
ருத்ரம்மாதேவி படத்தில் கமிட்டானதும் முறைப்படி வாள் சண்டை கற்றுக் கொண்டேன். லட்சுமி என்ற யானையுடன் பழகி, அதனை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டேன்.
 
குதிரை சவாரிதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பலமுறை குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.
 
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி இறக்கியிருக்கிறீர்களே...?
 
அது எனக்கு சிரமமாக இல்லை. நான் யோகா மாஸ்டர் என்பதால் உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் பெரிய விஷயமாக இருக்கவில்லை.
 
ஆர்யாவை காதலிப்பதாக செய்தி வந்ததே?
 
ஆர்யா என்றில்லை, நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும்..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

அவரை காதலிப்பதாக செய்தி வரும். அந்த கிசுகிசுக்களை நான் பொருட்படுத்துவதில்லை.
 
எப்போது திருமணம்?


 

 
நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். என் கையில் இருக்கும் படங்களையும், அடுத்து நடிப்பதற்காக பேசிக் கொண்டிருக்கும் படங்களையும் முடிக்க 3 வருடங்களுக்கு மேல் ஆகும். அதன்பிறகு திருமணம் பற்றி யோசிப்பேன்.
 
உங்களை தென்னக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்களே...?
 
நான் அந்த பெயருக்கு ஆசைப்படவில்லை. அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். என்னை அனுஷ்கா என்று அழைப்பதையே விரும்புகிறேன்.
 
பாகுபலி, ருத்ரம்மாதேவி என சரித்திரப் படங்களில் தொடர்ச்சியாக நடித்தது, உங்களிடம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
 
தாக்கம்னு சொன்னால், முன்பு நான் சரித்திர புத்தகங்களை விரும்பிப் படிப்பது இல்லை. இப்போது நிறைய படிக்கிறேன்.