வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (14:35 IST)

தத்துக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடப் போறேன் - ஹன்சிகா பேட்டி

27 வயதில் 31 குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார் ஹன்சிகா. இந்த 31 குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் என்று அனைத்துச் செலவுகளும் ஹன்சிகாவுடையது.
தனது தீபாவளி கொண்டாட்டம் பற்றி அவர் அளித்த பேட்டியிலிருந்து...
 
தீபாவளியை எப்படி கொண்டாடப் போறீங்க...?
 
தீபாவளி எனக்குப் பிடித்த பெஸ்டிவெல். இந்த தீபாவளியை என்னுடைய 31 தத்துக் குழந்தைகளுடன் கொண்டாடப் போறேன். 
 
பட்டாசு...?
 
பட்டாசு வெடிப்பது எனக்குப் பிடிக்காது. பொல்யூஷன் ஏற்படும். அதனால் பட்டாசை தவிர்க்கலாம்.
 
உணவு...?
 
பொதுவா ஸ்வீட்ஸ் எனக்குப் பிடிக்காது. தீபாவளி என்றால் அம்மா செய்கிற ஆலு பூரிதான். அதிலிருந்துதான் தீபாவளி கொண்டாட்டமே தொடங்கும்.
 
போகன் படம்...?
 
ரொம்பவும் வித்தியாசமான படம். முதல்முறையாக அரவிந்த்சாமியுடன் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. விரைவில் பாடல்கள், டீசரை வெளியிட இருக்காங்க. 
 
தமிழக ரசிகர்கள்...?
 
அவங்களை மாதிரி ரசிகர்களை நான் எங்கேயுமே பார்த்ததில்லை. புதுமுகங்களை வரவேற்பதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை.
 
ஏன் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை?
 
எப்போதும் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் செய்ய விருப்பமில்லை. கொஞ்சமாவது வித்தியாசமான சவாலான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இப்போதுதான் அப்படி செலக்ட் செய்து நடிக்கிறேன். வருகிற எல்லா வாய்ப்புகளிலும் நடிப்பதில்லை.