வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 10 ஜூன் 2015 (15:04 IST)

சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர் யார்? - த்ரிஷா சுவாரஸியமான கேள்வி பதில்

கடந்த பத்தாண்டுகளில் த்ரிஷா அளவுக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகை யாருமில்லை. ஒவ்வொரு பிரச்சனையையும் அவரளவுக்கு துணிவாக, நேராக எதிர் கொண்டவர்களும் யாருமில்லை. அவர் இன்றளவும் பீல்டில் நிலைத்து நிற்பதற்கு சாயமிழக்காத அவரது அழகும், தினம் மெருகேறும் நடிப்பும் மட்டும் காரணமில்லை. எதையும் கடந்து செல்லும் அவரது துணிச்சலே த்ரிஷாவின் இருப்பை இன்றளவும் சாத்தியப்படுத்தியுள்ளது.
திருமணம் நிச்சயதார்த்தத்துடன் முறிந்து போன நிகழ்வை மற்றொரு நிகழ்வாக கருதி சகஜநிலைக்கு திரும்பியிருக்கும் அவர், ரசிகர்கள் இணையத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
உங்களை பெற்றோர் எப்படி அழைப்பார்கள்? 
 
ஹனி.
 
பயணம் செய்ய விரும்பும் நாடு எது? 
 
தென் அமெரிக்கா. 
 
அரண்மனை-2 மூலம் பேய் படத்தை தேர்வு செய்து நடிப்பது ஏன்? அது சவாலான வேடம் என்பதாலா அல்லது பேய் பட சீசன் என்பதாலா? 
 
அரண்மனை-2 படத்தில் எனக்கு சவாலான வேடம். அதோடு, சுந்தர் சி. டைரக்ஷனில் நடிக்க விரும்புகிறேன்.
 
தினமும் நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்? 
 
படப்பிடிப்பு இருக்கும்போது, தினமும் ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், 12 மணி நேரம் தூங்குகிறேன்.
 
முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறீர்களா? 
 
எங்கள் பள்ளிக்கூட விழாவில், அம்மாவை முதன் முதலாக சந்தித்து இருக்கிறேன். சிறப்பு விருந்தினராக அவர் எங்கள் பள்ளி விழாவுக்கு வந்திருந்தார்.
 
எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பீர்கள்? 
 
திகில் படங்களை விரும்பிப் பார்ப்பேன். 
 
10 வருடங்களுக்கு மேலாக நான் உங்களை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? 
 
தொடர்ந்து காதலித்துக் கொண்டிருங்கள். திருமணம்... அப்புறம் பார்க்கலாம்.   

விஜய்யுடன் நீங்கள் நடித்த படங்களில் பிடித்தது? 
 
கில்லி. 
 
அஜீத்துடன் நடித்ததில் பிடித்த படம்? 
 
என்னை அறிந்தால்.

செல்வராகவன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? 
 
அந்த படத்தை நான் தவிர்க்கவில்லை. கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே நடிக்கவில்லை. 
தெலுங்கு நடிகர் ராணாவுடன் ஜோடியாக நடிப்பீர்களா? 
 
ஏன் நடிக்கக் கூடாது? 
 
இன்னும் 10 வருடங்கள் கழித்து நடிகையாக இருப்பீர்களா, குடும்பப் பெண்ணாக இருப்பீர்களா? 
 
வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன். 
 
வருங்காலத்தில், ஆண் குழந்தையை விரும்புவீர்களா, பெண் குழந்தையை விரும்புவீர்களா? 
 
ஆண் ஒன்றும், பெண் ஒன்றும்...
 
ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பமா? 
 
லியோனார்டோ டி காப்ரியோவுடன் நடிக்க விரும்புகிறேன்.