செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2015 (09:21 IST)

எப்போதுமே தனியாக படுக்க மாட்டேன் - தாப்ஸி பேட்டி

காஞ்சனா 2 வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் தாப்ஸி. அவரது சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அவர் நடித்துள்ள, வை ராஜா வை நாளை வெளியாகிறது. கூடவே காஞ்சனா 2 படத்தின் தெலுங்குப் பதிப்பு கங்காவும் நாளை திரைக்கு வருகிறது. உற்சாகத்திலிருந்தவரின் வெளிப்படையான பேட்டி உங்களுக்காக.
காஞ்சனா 2 படம் பற்றி சொல்லுங்க?
 
காஞ்சனா 2 படத்தில் நடித்தது எனக்கு சேலஞ்சிங்காக இருந்தது. எனக்கு மட்டுமில்லை ராகவா லாரன்ஸ் சாருக்கும் அப்படித்தான். 
 
காஞ்சனா 2 கதை கேட்டதும் உடனே நடிக்க ஒத்துகிட்டீங்களா?
 
காஞ்சனா 2 பண்ணணும்னு நான் ரொம்பவும் விரும்பினேன். இரண்டு மாசம் டைம் எடுத்துகிட்டு, மெதுவா அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி பண்ணுனேன். ஆனால், முதல்ல, பண்ண மாட்டேன், ரொம்ப ரெஸ்பான்ஸிபிளான வேடம் என்று நடிக்க மறுத்தேன். 
 
ஏன் இந்த பயம்?
 
தமிழ்ல நான் இப்போதான் ஸ்லோவா ஸ்டெடி ஆகிட்டு வர்றேன். தமிழ்ல நான் கொஞ்சம் படங்கள்தான் பண்றேன். ஆனா, நல்ல படங்கள் பண்ற சந்தோஷம் இருக்கு. காஞ்சனா 2 கேரக்டர் பெரிய ரிஸ்க். என்னால பண்ண முடியுமான்னு சந்தேகம் இருந்தது. ஆனா லாரன்ஸ் சார், எனக்கு 100 பர்சன்டேஜ் நம்பிக்கை இருக்குன்னு என்னை நடிக்க வச்சார்.
 
நிஜ வாழ்க்கையில பயம் உண்டா?
 
சின்ன வயசுல என் பாட்டி அல்லது வேற யார்கூடவாவதுதான் தூங்குவேன். இப்போதும் தனியாக படுக்க மாட்டேன். என்னுடைய சிஸ்டர்கூடதான் படுத்துப்பேன். என்னால் தனியா படுக்க முடியாது, பயம். இருட்டும் நிசப்தமும் சேர்ந்தால் எனக்கு பயம் வந்திடும். 
 
பேய் கெட்டப் எப்படி இருந்தது?
 
பேய் கெட்டப் போட இரண்டு இரண்டரை மணி நேரம் ஆகும். மேக்கப்பை கலைக்க ஒரு மணி நேரமாகும். சோ பிஸிகலி ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. 

வை ராஜா வை படத்தில் நீங்க வில்லியா?
 
வில்லி கிடையாது. முழுக்க வித்தியாசமான வேடம். நான் வில்லன், ஹீரோ எல்லாம் பார்க்கிறதில்லை. என்னுடைய கேரக்டர் பிடித்திருந்தால் நடிப்பேன் அவ்வளவுதான். இந்தப் படத்துல சூதாட்டத்தை கத்துக் கொடுக்கிறதுதான் என்னோட ரோல். 
இந்திப் படங்கள்...?
 
இந்தியில் ஒரு படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கு. ரன்னிங் சாதிக் டாட் காம். இன்னொரு படம் புதுசா கமிட்டாகியிருக்கேன். 
 
இந்தியில் அதிக கிளாமரா நடிக்க வேண்டியிருக்குமே?
 
இந்தியில் என்னை கிளாமர் கேர்ளாக பார்க்கிறதில்லை. கேர்ள் நெக்ஸ்ட் டோர் மாதிரிதான் ட்ரீட் பண்றாங்க. தெலுங்கில் கிளாமர் கேர்ளாகதான் பார்க்கிறாங்க. தமிழ்ல கிளாமர் நான் கிளாமர் இரண்டும் பண்றேன்.
 
லிவிங் டுகெதர் பற்றி உங்க அபிப்ராயம் என்ன? 
 
லிவிங் டுகெதர் ஒன்றும் தப்பு கிடையாது. கல்யாணம் செய்து கணவன், மனைவி ஆனபிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துக்குறாங்க. அதனால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுறாங்க. லிவிங் டுகெதர் மூலம் திருமணத்துக்கு முன்பே ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் இரண்டு பேருமே சந்தோஷமாக வாழ முடியும்.
 
இப்போதெல்லாம் நடிகைகளின் ஆபாசப் படங்கள் என்று இணையத்தில் வீடியோவும், புகைப்படங்களும் அதிகம் உலவுகிறதே?
 
நடிகைகளின் போலி ஆபாசப் படங்களை இணையத்தில் பரவவிடுவதை சில விஷமிகள் தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.