வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (12:44 IST)

நான் சொந்தக் குரல்ல பேசி நடிக்கிற தமிழ் நடிகை - கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். முதல் படம் இன்னும் வெளியாகாத நிலையில் சிவ கார்த்திகேயனுடன் ரஜினி முருகன், பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை என இரு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 
 
கீர்த்தி சுரேஷ் நடிகை மேனாகாவின் மகள். மேனகா சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு மலையாளப்பட தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்தார். அம்மாவை முந்தும் வேகத்தில் தமிழில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அம்மா 15 படங்களில் நடித்த உடன் ஒதுங்கிவிட்டார்கள். நீங்கள் எப்படி?
 
100 படங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அம்மா சிவாஜி சாரோடு நடிச்சிருக்காங்க. நான் அவர் பேரன் விக்ரம் பிரபுவுடன் நடிக்கிறேன். அம்மா ரஜினி சாரோட நடிச்சிருக்காங்க. நான் அவர் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறேன். எல்லாம் கடவுளின் புண்ணியம்.
 
அம்மா, அப்பா இருவரும் சினிமாவில் இருப்பவர்கள் என்பதால் உங்கள் சினிமா அறிமுகம் சுலபமாக இருந்ததா?
 
அப்பாவுக்கு நான் நிறைய படிக்கணும்னு ஆசை. எனக்கு நடிக்கணும்னு ஆசை. அவரிடம் அதுபற்றி சொன்ன போது, வேண்டாம் நிறைய படின்னு சொன்னார். அந்த நேரத்தில் ப்ரியதர்ஷன் அங்கிள் அவரோட கீதாஞ்சலி படத்தில் நடிக்கக் கேட்டார். மோகன்லால் ஹீரோ, டைரக்ஷன் ப்ரியதர்ஷன் என்பதால் அப்பாவால் நோ சொல்ல முடியலை. 
 
தமிழில் இது என்ன மாயம் வாய்ப்பு எப்படி கிடைச்சது?
 
இயக்குனர் ஏ.எல்.விஜய் இது என்ன மாயம் படத்துக்கு ஹீரோயின் தேடுனபோது, ப்ரியதர்ஷன் அங்கிள்தான் என்னை ரெகமண்ட் செய்தார். ப்ரியதர்ஷன் அங்கிள்கிட்டதான் ஏ.எல்.விஜய் உதவி இயக்குனராக முன்னாடி இருந்தார்.

பாம்பு சட்டை...?
 
இது என்ன மாயம் படத்தில் மனோபாலா சாரும் எங்களுடன் நடித்தார். அப்போது, என்னோட படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொன்னார். ஏதோ தமாஷ்தான் பண்றார்னு நினைச்சேன். ஆனா உண்மையாகவே பாம்பு சட்டை படத்தில் என்னை ஹீரோயினாக்கிட்டார்.
தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே?
 
ஆமா. விஜய நிர்மலாவின் பேரன் நவீன் நடிக்கிற தெலுங்குப் படத்தில் நான்தான் ஹீரோயின். நவீனுக்கு அதுதான் முதல் படம்.
 
தமிழ், தெலுங்கில் பேசி நடிப்பது சிரமமாக இல்லையா?
 
என்னோட அம்மா மேனகா அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. அப்பாதான் மலையாளி. அதனால எனக்கு தமிழ் நல்லா வரும். ரஜினி முருகனில் நல்லா மதுரை தமிழ் பேசி நடிக்கிறேன். தமிழில் பேசி நடிக்கிற தமிழ் பொண்ணுதான் நான். தெலுங்குதான் கொஞ்சம் சிரமமா இருக்கு.
 
கிளாமராக நடிப்பீங்களா?
 
பேட்டின்னு வர்ற எல்லோரும் கேக்கிற கேள்வி. அம்மா கிளாமரா நடிக்காததனால் அப்படி கேட்கிறாங்க. அம்மாவோட காலகட்டம் வேற. இப்போ அந்த மாதிரி, கிளாமரா நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியாது. அதுக்காக வரைமுறை தாண்டவும் மாட்டேன்.
 
ட்ரீம் ரோல், எதிர்கால திட்டம்?
 
அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நம்ம கேரக்டர் பெயர் சொல்ற மாதிரி இருக்கணும், அவ்வளவுதான். எதிர்கால திட்டம்னு எதுவும் கிடையாது. ஃபேஷன் டிஸைனிங் மேல ஆர்வம் இருந்தது. அதைவிட பெட்டரா சினிமா சான்ஸ் கிடைத்ததால் அதை விட்டுட்டேன். நாளைக்கு எது வேணா நடக்கலாம். எதுவா இருந்தாலும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும். அதுதான் என்னோட ஒரே எண்ணம்.