வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 9 மே 2015 (12:01 IST)

கவுண்டமணியிடமிருந்து நிறைய கத்துகிட்டேன் - சாந்தனு பேட்டி

சாந்தனு முதல்முறையாக சீரியஸ் ரோலில் நடித்திருக்கும் படம், வாய்மை. கவுண்டமணி தொடங்கி ஊர்வசிவரை ஒருபக்கம் சீனியர்கள் என்றால் மனோஜ், பிருத்வி என இன்னொரு பக்கம் ஜுனியர்ஸ். படத்தைக் குறித்தும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தனு பகிர்ந்து கொண்டவை சுவாரஸியமானவை.
வாய்மை பற்றி இரண்டே வரியில் சொல்லுங்க?
 
வாய்மை என்னோட கரியர்ல  இம்பார்ட்டண்ட் ஃபிலிம். அப்புறம் என்னுடைய மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். 
 
எப்படி...?
 
இத்தனை வருஷமா நான் வேற மாதிரி ரோல்ஸ் செலக்ட் பண்ணி நடிச்சிட்டிருந்தேன். சீரியசான ஒரு ரோல், பொறுப்பான ஒரு ரோல் பண்ணணும்னு நினைச்சுகிட்டிருந்தப்போ வந்ததுதான் இந்த வாய்மை வாய்ப்பு. 
 
வாய்மை படத்தை நீங்க ஒப்புக் கொள்ள என்ன காரணம்?
 
இந்தப் படத்துல ஒரு டயலாக் இருக்கு. ஒருத்தர் என்கிட்ட வந்து, நீ சொல்றது உண்மைன்னு எந்தளவுக்கு நம்புறன்னு கேட்பார். அதுக்கு நான்,  சத்தியமா சொல்றேன் சார், நான் பயப்படுறேன்னு சொல்வேன். இந்தக் கதையை கேட்டபோது இந்த கேரக்டரை பண்றதுக்கு பயமா இருந்திச்சி. அதுதான் நான் இந்தப் படத்துல நடிச்சதுக்கு முதல் காரணம். 
 
ஏன் அப்படியொரு பயம்?
 
அந்தளவு வெயிட்டான, கஷ்டமான ரோல். ரிஸ்க்கான மெச்சூர்டா இருக்கிற ரோல். அதை ஒரு சேலஞ்சா எடுத்து பண்ணிருக்கேன்.

நிறைய சீனியர்ஸ்கூட நடிச்சிருக்கீங்க...?
 
இந்தப் படத்துல நடிச்சிருக்கிற தியாகராஜன் சார், ரஞ்சித் சார், தலைவர் கவுண்டமணி சார், ஊர்வசி மேடம்னு எல்லோருமே சீனியர்ஸ். அவங்கக்கூட போட்டிப்போட்டு நடிக்கணும்ங்கிறதே ஒரு சேலஞ்சிங்காதான் இருந்தது. எல்லோருமே எனக்கு உதவியா இருந்தாங்க. இதுமாதிரி ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அதை ஒரு பிளஸ்ஸிங்காகதான் நினைக்கிறேன். 
கவுண்டமணி பற்றி...?
 
நான் அவரோட தீவிர ரசிகன். பெரிய லெஜென்ட். அவரைப் பத்தி நான் சொல்றதுக்கு எதுவுமில்லை. அவரைப் பத்தி சொல்றதுன்னா... ஏழு மணிக்கு ஷுட்டிங்னா ஆறே முக்காலுக்கு எல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, மேக்கப்மேனுக்கு போனைபோட்டு கூப்பிட்டு, ஏழு மணிக்கெல்லாம் மேக்கப்போட தயாரா, ஏம்பா இன்னும் ஷாட் வைக்கலை, ஏன் இன்னும் ஷுட்டிங் ஆரம்பிக்கலைன்னு இன்னும் அதே ஆர்வம் டெடிகேஷனோட இருக்கிறதைப் பார்த்து பிரமிச்சிட்டேன். அவரோட டெடிகேஷன்லயிருந்து நான் நிறைய கத்துகிட்டேன். 
 
இயக்குனர் செந்தில்குமார் பற்றி...?
 
இயக்குனர் செந்தில்குமாரை நம்பி மொத்தமா என்னை அவர்கிட்ட ஒப்படைச்சேன். அதுக்குண்டான பலன் கிடைச்சிருக்கு. இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்னு நம்பறேன். அந்த பெருமை செந்தில்குமாரையே சேரும்.