வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (10:16 IST)

நடிகர் சங்கம் களவு போய்விட்டது - நடிகர் வடிவேலு பேட்டி

நடிகர் சங்க தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஓட்டு வேட்டையில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர்.


 

 
விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மதுரை நாடக நடிகர்களிடம் ஓட்டு சேகரித்தனர். வடிவேலும் இதில் கலந்து கொண்டார். பிறகு நாடக நடிகர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
 
இந்தத் தேர்தலில் விஷால் அணி போட்டியிட என்ன காரணம்?
 
நடிகர் சங்கம் இப்போது இல்லை. காணாமல் போய்விட்டது, சரியாகச் சொன்னால் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிக்கிறதுதான் முதல் வேலை. இந்த தேர்தலும் அதற்காகத்தான். பாண்வர் அணி ஆண்டவர் அணி. அது கண்டிப்பா வெற்றி பெறும்.
 
உங்கள் அணி நடிகர் சங்கத்தில் அரசியலையும், சாதியையும் புகுத்திவிட்டதாக பேசுகிறார்களே...?
 
எதிரணிக்கு பயம் வந்திடுச்சி. அதுக்காகதான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுறாங்க. ராதிகா... விஷால் ரெட்டி விஷால் ரெட்டின்னு பேசுறாங்க. எதுக்கு இப்போ...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

அப்படி பேசணும்? நடிகர்களுக்கு சாதி, மதம், மொழி உண்டா? ராதிகா பேசும்போது அவங்க பக்கத்திலேயே ஊர்வசி இருக்காங்க.
 
அவங்களை மலையாளின்னு சொல்வாங்களா? இல்லை ரஜினியை கன்னடர்னு சொல்வாங்களா? சொல்ல மாட்டாங்க இல்ல. அவங்களை யாராவது எதிர்த்தா உடனே சாதியை குறிப்பிட்டு பேசுவாங்களா?


 

 
உங்கள் அணியை யாரோ தூண்டிவிடுவதாக கூறுகிறார்களே?
 
ஏங்க, எங்க எல்லாருக்கும் மூளை இருக்குங்க. யாரும் யாரையும் தூண்டி விடலை. நடிகர் சங்கத்தை காணோம். அதை கண்டு பிடிக்கணும். அதுக்காக எல்லாரும் ஒண்ணு சேர்ந்திருக்கோம்.
 
சிம்பு, நீங்கள் நாய்கள் அல்ல நாங்கள் என்று விஷால் அணியை சாடியிருக்கிறாரே?
 
சிம்பு அப்படி பேசியிருக்கக் கூடாது. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டார். அவரைத்தான் பக்கத்திலிருந்து தூண்டிவிட்டிருக்காங்க. அவர் அப்படி பேசியது தப்புதான். பக்கத்திலிருந்த பாக்யராஜே, சிம்பு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டார். அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொன்னார்.
 
நாடக நடிகர்கள் அவர்கள் பக்கம் இருப்பதாகவும், அதனால் அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறுகிறார்களே...?
 
அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றது. அவங்க நாடக நடிகர்களை மதிச்சதேயில்லை. எல்லாரும் எங்க பக்கம்தான் இருக்காங்க. 18 -ஆம் தேதி தேர்தல் இருக்கில்ல. அப்போ உண்மை தெரிஞ்சிரும்.
 
பாண்டவர் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
 
சும்மா பளபன்னு இந்த லைட்டு மாதிரியே பிரகாசமா இருக்கு. இந்தத் தேர்தலில் நாங்க கண்டிப்பா வெற்றி பெற்று காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம்.