1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 9 ஜனவரி 2015 (10:23 IST)

மீகாமனில் நான் நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றதுக்கு காரணம் இயக்குனர்தான் - ஆர்யா

மீகாமன் படம் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம் என பார்த்தவர்களால் புகழப்படுகிறது. ஆனால் படத்தின் கலெக்ஷன் ஆனந்தப்படும் அளவுக்கு இல்லை. கலெக்ஷன் இல்லாமல் வெறும் புகழ் மட்டும் படம் சம்பந்தப்பட்டவர்களை திருப்திப்படுத்திவிடுமா? முக்கியமாக படத்தின் ஹீரோ ஆர்யாவை? 


 
மீகாமன் இயக்குனர் மகிழ்திருமேனியுடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது?
 
மகிழ் பேசினாலும் சரி, படம் எடுத்தாலும் சரி. எல்லோரும் அமைதியா உட்கார்ந்து கேட்கிறாங்க, பார்க்கிறாங்க. ஏன்னா, அவர் வொர்க் பண்ணும் போது அவ்வளவு கிளாரிட்டியா வொர்க் பண்ணுவார். இந்தப் படத்துல நான் நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றதுக்கு காரணமே அவர்தான். அவர் என்ன சொன்னாரோ, அதைதான் செய்தேன். லைட்டா சிரிங்க, தலையசைங்க போதும்னு சொல்வார். ஒண்ணுமே நான் பண்ணலையேன்னு அவர்கிட்ட கேட்பேன். பட், அவர்கிட்ட எனக்கு கான்பிடென்ட் இருந்திச்சி. வேல்யபுள் ஸ்கிரிப்ட். அந்தவகையில் நான் லக்கி.
 
படத்தின் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்ததே... குறிப்பாக சில குளோசப் காட்சிகள்?
 
சில படங்களை பார்த்ததும் கேமராமேன் யார்னு கேட்கத் தோணும். அந்த மாதிரி படம் இது. அவ்வளவு டைட் குளோசப் வைக்கும்போதே பயமாக இருக்கும். லைட்டிங் போகஸிங் எல்லாமே சரியா இருந்ததான் அந்த மாதிரி குளோசப் வைக்கிறதுக்கு கான்பிடென்ட் வரும். 
 
படத்தின் இன்னொரு சிறப்பு, பின்னணி இசை...?
 
படம் தொடங்கி படப்பிடிப்பு நடந்துகிட்டிருக்கும்போதே மகிழ் சொல்வாரு. இந்தப் படத்துல தமன் ஆர்ஆர்ல பின்னப் போறார்னு. அவர் சொன்ன மாதிரியே ஹி டன் ஏ பென்டாஸ்டிக் ஜாப். சூப்பர்ப். 
 
இந்தப் படத்தின் சிறப்புன்னு எதை சொல்வீங்க?
 
இந்தப் படத்தை பொறுத்தவரை, படம் முடிஞ்சி வெளியே வந்ததும் ஒவ்வொரு டெக்னீஷியனா குறிப்பிட்டு சொல்றாங்க. சவுண்ட் நல்லாயிருந்தது, மியூசிக் நல்லா இருந்தது, ஆர்ட் நல்லா இருந்ததுன்னு. அதுக்கு பிளான் பண்ணி செய்த டீம் வொர்க்தான் காரணம்.

சஞ்சனா...?
 
சஞ்சனாவுக்கு கண்டிப்பா தாங்க்ஸ் சொல்லணும். ஏன்னா ஹன்சிகா எந்த பங்ஷனுக்கும் வர்றதில்லை. சஞ்சனாதான் ஒரே லேடி ஆர்ட்டிஸ்டா எல்லா பங்ஷனுக்கும் வந்தாங்க. 
 
 படத்தின் எடிட்டிங் பத்தி யாராவது குறிப்பிட்டு சொன்னார்களா?
 
இந்தப் படத்தோட எடிட் பேட்டர்ன் ரொம்ப வித்தியாசமாக இருந்ததுன்னு நிறைய பேர் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. குறிப்பா அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் படம் பார்த்திட்டு எடிட்டிங் பற்றி பேசினாங்க.


 

 
இன்டர்வெல் ப்ளாக்கில் நீங்கள் தப்பிக்கிற காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. அதுபற்றி...?
 
இன்டர்வெல் ப்ளாக்ல மகாதேவன் சாரை ஷுட் பண்ணும் போது தியேட்டரே கிளாப்ஸ் பண்ணுனது ஆச்சரியமா இருந்திச்சி. டக்குன்னு சுட்டதும், பைட்டுக்கான அந்த லீடுக்கே கிளாப் பண்ணுனாங்க. ஆக்சுவலா அது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவோட ஐடியாதான். மெயின் ஆளை போட்டுத் தள்ளுனா மத்தவங்க கவனம் சிதறும், அந்த நேரத்தில் ஹீரோ எஸ்கேப்பாகலாம்னு அவர்தான் சொன்னார். 
 
புரொடியூசர் பற்றி...?
 
இந்த மாதிரி ஒரு படத்தை புரொடியூஸ் பண்ண மத்த புரொடியூசர்ஸ் ஆசைப்பட மாட்டாங்கன்னு சொல்ல மாட்டேன். பட், சின்ன ஒரு பயம் இருக்கும். ஜபக் சார் போல்டா இந்தப் படத்தை தயாரிச்சார். 
 
படத்தின் ரிசல்ட் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா?
 
யூஸ்வல் கமர்ஷியல் பார்மெட்டில் இல்லாத ஒரு படம் இவ்ளோ நல்ல விமர்சனம், சக்சஸ், அங்கீகாரம் பெறுவது ரொம்ப கஷ்டம். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்.