Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுச்சி லீக்ஸ் விவகாரம் ; இன்னும் இதுபோல் நிறைய வரும் - ஆர்யா அதிர்ச்சி தகவல்

Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (09:11 IST)

Widgets Magazine

பின்னணிப் பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், எதிர்காலத்தில் இன்னும் நிறைய வரும் என நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், யாரோ ஒருவர் தன்னுடைய டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், சுசித்ரா தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது செயல்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என அவரின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பற்றி சம்பந்தப்பட்ட எந்த நடிகர், நடிகரும் இதுவரை போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஆர்யா “ தற்போது போலி வீடியோக்கள் வெளிவருவது சர்வ சாதரணமாகி விட்டது. அதுவும், பிரபலமான ஒருவரின் சமூக வலைதள பக்கத்திலிருந்து போலி வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடுவது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. இது தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் இதுபோன்ற போலி வீடியோக்கள் வெளிவரும். இது நல்லதல்ல. இது போன்ற வீடியோக்களை நாம் ஆதரிக்கக் கூடாது.  பிரபலங்களின் பெயரால் வெளியாகும் அனைத்து வீடியோக்களுமே போலிதான். அதில் உண்மை இருக்கிறது என நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஷாலை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்! கலைப்புலி எஸ்.தாணு ஆவேசம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ...

news

மொட்டசிவா கெட்டசிவா ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கடந்த மாதமே வெளியாக வேண்டிய ...

news

எடுபிடி வேலை பார்த்தவனெல்லாம் தயாரிப்பாளரா? டி.சிவா ஆவேசம்

ஏப்ரல் 2ஆம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் தேதி நெருங்க நெருங்க ...

news

தற்கொலைக்கு வாய்ப்பு உள்ளது. சுசிலீக்ஸ் குறித்து சத்யராஜ் அதிர்ச்சி தகவல்

கோலிவுட் திரையுலக கடந்த சில நாட்களாக கலங்கடித்து கொண்டிருக்கும் விஷயம் சுசிலீக்ஸ். பாடகி ...

Widgets Magazine Widgets Magazine