வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (13:27 IST)

திரையுலகினர் அளிக்கும் படங்களின் வசூல் பொய்யானவை - அமீர் கான் அதிரடி பேட்டி

அமீர் கான் நடித்துள்ள பிகே படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அமீர் கான் வேற்றுக்கிரகவாசியாக நடித்துள்ளார். பூமியையும், அதிலுள்ள மனிதர்களையும் அறிந்து கொள்ள வரும் அவர் தனது விண்கலத்துடன் தொடர்பு கொள்ளும் ரிமோட்டை தொலைத்துவிடுவதால் பூமியிலேயே தங்க வேண்டிவருகிறது. ராஜஸ்தான் பாலைவனத்தில் அவர் நிர்வாணமாக லேண்ட் ஆகும் காட்சியைதான் போஸ்டராக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
 
பிகே வெளியாவதை முன்னிட்டு பத்திகைக்கு அமீர் கான் பேட்டிளித்தார். அதன் தமிழாக்கம் இங்கே உங்களுக்காக.
 
பிகே எந்த மாதியான படம்...?
 
என்னுடைய ஒவ்வொரு படத்திலும் விசேஷமாக இருப்பது கதைதான். உதாரணமாக கஜினி, 3 இடியட்ஸ், தூம் - 3 படங்களை சொல்லலாம். அதேபோல் பிகேயிலும் விசேஷமான கதை உள்ளது. அதை மற்ற படங்களுடன் ஒப்பிட மாட்டேன்.
 
உங்களின் பிற படங்களின் வசூலை பிகே முந்துமா?
 
இந்தப் படம் இவ்வளவு கோடி வசூல் செய்தது, அந்தப் படம் இவ்வளவு கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதை கேட்கும் போது நான் ஒவ்வொருமுறையும் ஷாக்காகிவிடுகிறேன். ஏனெனில் அவர்கள் சொல்வதில் 100 -க்கு 99 சதவீதம் உண்மையில்லை, பொய். இதில் என்னுடைய படங்களும் விதிவிலக்கல்ல. அதனால் ரசிகர்கள் வசூலை பார்ப்பதைவிட்டு படத்தின் கதையை பாருங்கள் என்பேன்.
 
சரி, படம் வெற்றி பெறுமா?
 
அதை நான் சொல்லக் கூடாது. அதேநேரம் படம் மக்களுக்குப் பிடிக்கும், கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்து ரசிப்பார்கள். அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
 
நிர்வாண போஸ்டரை வெளியிட்டது விளம்பரத்துக்காகத்தானே?
 
பிகே போஸ்டரை வெளியிடுவது என்று முடிவான போதே, நிர்வாணப் போஸ்டரைதான் வெளியிடுவது என தீர்மானித்தோம். வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, செக்ஸ் ரீதியாகவோ அப்படி தீர்மானிக்கவில்லை. படத்தின் உயிரே அந்த நிர்வாண காட்சிதான் என்பதால் அப்படியொரு முடிவை எடுத்தோம். இந்த சர்ச்சைக்குப் பிறகு சொல்லிக் கொள்கிறேன். பிகே ஒரு உலகளாவிய படம். குழந்தைகள் பெரியவர்கள், நகரம், கிராமம் என்று எந்த பாகுபாடில்லாமல் அனைவரும் ரசிக்கக் கூடியது.