வா‌ய்ப்புக்காக செக்ஸ் உடன்பாடு - சனாகான் அதிரடி பதில்

Webdunia|
FILE
டர்ட்டி பிக்சர் தந்த வசூல், புகழ் இரண்டும் இயக்குனர்களை சில்க் ஸ்மிதாவின் கதையை நோக்கி இழுத்தது. சில்க்கின் கேரக்டரில் நடிக்க நடிகைகளுக்குள் போட்டா போட்டி. அதில் வெற்றி பெற்றவர் சனாகான்.

தமிழ், மலையாளத்தில் இயக்குனர் அனில் சில்க்கின் வாழ்க்கை கதையை இயக்கியிருக்கிறார். சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். நடிகையின் டைரி என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சில நாட்கள் முன்பு சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட சனாகான், விழா முடிந்த பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சாதாரணமாக நடிகைகளிடம் கேட்கத் தயங்குகிற கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. சில்க்கின் வேடத்தில் நடித்தவர்தானே என்ற எண்ணத்தில் நிருபர்களின் மனக்கதவு அன்று தடையின்றி திறந்து கொண்டது.
எனில், சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்த போது என்னவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டிருப்பார்? ஏடாகூடமான கேள்விகளுக்கு அனாயசமாக பதிலளித்த சனாகான் ஓர் ஆச்சரியம்தான்.

சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்திருக்கிற நீங்கள், அவரின் படங்களைப் பார்த்து அவரது மேனரிசங்களை ஸ்டடி செய்தீர்களா...?
FILE

சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிப்பது உறுதியானதும், இணையத்தில் அவரின் படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய மேனரிசங்களை, முகபாவனைகளை அந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொண்டேன்.


இதில் மேலும் படிக்கவும் :