வழக்கு எண் படத்தில் நமக்குக் கிடைத்த நல்ல நடிகை மனிஷா யாதவ். நடிப்புத் திறமையை வைத்து மட்டும் இதை சொல்லவில்லை. சம்பள விஷயத்திலும் பிற நடிகைகள் போல் கறார் காட்டுவதில்லை. பட்டைய கௌப்பணும் பாண்டியா படத்தில் மனிஷாவை ஒப்பந்தம் செய்ததே சம்பளத்தை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைத்துக் கொண்டதால்தான். நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் நடித்தவர் முதல்முறையாக வெரைட்டியான ரொமான்டிக் காமெடியில் நடித்துள்ளார். பிரஸ்மீட்டில, பாடல்கள் வெளியீட்டு விழாவில் அந்த மகிழ்ச்சியை மனிஷாவிடம் காண முடிந்தது.