வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (04:52 IST)

இலங்கையில் போர்க்குற்றம்: சர்வதேச விசாரணை கோரி தமிழர்கள் நடைபயணம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, கிளிநொச்சியில் தமிழர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
 
கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. இதில் இலங்கை ராணுவம் போர்விதிமுறைகளை மீறி செயல்பட்டது. இதனால், முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் தமிழிர்கள்  படுகொலை செய்யப்பட்டனர்.
 

 
இலங்கை அரசின் இந்த படுகொலைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி, உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில், இந்த படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
 
எனவே, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை தமிழர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
 
இந்த நடைபயணத்தில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும், காணாமல் போனவர்களின் உறவினர்களும் பலர் கலந்து கொண்டு நீதி கோரினர்.