செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (05:55 IST)

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் ராஜபக்சே இல்லை: மைத்ரி பால சிறிசேன அறிவிப்பு

இலங்கை பிரதமர் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அதிபர் ராஜபக்சே இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன அறிவித்துள்ளார்.
 

 
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார்.  இந்த வெற்றியின் காரணமாக, இலங்கை அதிபராக பதவியேற்றார். தேர்தலின் போது அறிவித்தபடி அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
இந் நிலையில், வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், இலங்கை பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில், சுதந்திர கட்சியின் பிரதம் வேட்பாளராக ராஜபக்சே அறிவிக்கப்பட மாட்டார் என்றும், கூட்டணியில் போட்டியிடுபவர்கள் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தேர்தலில் வெற்றி பெறும்  எம்பிக்களின் விருப்பம் போலவே பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.