வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (11:42 IST)

நெதர்லாந்திடம் உதை வாங்கிய இங்கிலாந்து! கெவின் பீட்டர்சனின் சாபமோ?

இங்கிலாந்து அணி எங்கு சென்று கொண்டிருக்கிறது? 2009 ,  20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் நெதர்லாந்திடம் தோல்வி, இங்கு அயர்லாந்திடம் மற்றும் நேற்று நெதர்லாந்திடம் தோல்வி. ஊர்பேர் தெரியாத ஜிம்பாவே பவுலரிடம் வீழ்ச்சியடைந்து தோல்வி, ஆஸ்ட்ரேலியா கையில் மகா உதை. வெஸ்ட் இண்டீஸ் இந்தியா போன்ற அணிகளும் இங்கிலாந்தை நசுக்கியது. ஏன் இந்த அவலம் ஏன் இந்த சரிவு?
நெதர்லாந்து 133 ரன்கள் அடிக்க பவர் பேக்டு பேட்டிங் அணியான இங்கிலாந்து 88 ரன்களுக்குச் சுருண்டது.
 
டெஸ்ட் விளையாடும் அணி ஒன்றை இருமுறை நெதர்லாந்து வீழ்த்துகிறது என்றால் அது இங்கிலாந்துதான். அதுவும் T20 உலகக் கோப்பையில் இரண்டு உதை. நெதர்லாந்து அணியை ஜிம்பாவே உதைத்துள்ளது. இதே உலகக் கோப்பையில் இலங்கை 39 ரன்களுக்குச் சுருட்டியது. சமீபத்தில் ஒருநாள் அந்தஸ்தையும் நெதர்லாந்து இழந்துள்ளது.
 
இந்த அணியிடம் தோல்வி அடைந்தது இங்கிலாந்தின் சமீபத்திய மிகத் தாழ்வு நிலையாகும்.
 

கெவின் பீட்டர்சன் போன்ற ஒரு வீரரை அவமானப்படுத்தி வெளியேற்றியதுதான் இங்கிலாந்தின் இத்தகைய தாழ்வு நிலைக்குக் காரணம். T20 கிரிக்கெட்டை உலகிற்கு வழங்கிய நாடு ஏன் கிரிக்கெட்டையே தாஙள்தான் கண்டுபிடித்ததாக கூறிக்கொள்ளும் நாடு! ஏன் ஒரு கர்வமைல்லாமல் இப்படி இழிவு படவேண்டும். காரணம் சில பல தனிநபர்களின் ஈகோவினால் இங்கிலாந்து தேர்வுக்குழு நடத்தப்படுகிறது.
மிகவு மோசமான நிலை என்னவெனில் முதல் ஓவரில் நெதர்லாந்து  3பவுண்டரிகளை விளாசுகிறது. இங்கிலாந்து தன் இன்னிங்ஸ் முழுதுமே 4 பவுண்டரிகளையே எடுத்துள்ளது.
 
மேலும் 88 ஆல் அவுட் என்பது ஒரு அசோசியேட் அணியிடம் டெஸ்ட் அணி பெறும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இந்தியாஉக்கு எதிராக 80 ரன்களுக்கு ஏற்கனவே T20-யில் ஆல் அவுட் ஆகி சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத் தோல்வி என்றால் இந்தியாவுக்கு எதிராக 90 ரன்கள் இடைவெளியில் உதை.

பிட்சிற்கு பந்துகள் வராத நிலையில் ஏதோ பெர்த்தில் ஆடுவது போல் மட்டையை சுழற்றுகிறார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள். எல்லாம் வானத்தில் ஏறி கேட்ச் ஆனது. நெதர்லாந்து பீல்டிங் இந்த தொடர் முழுதும் சீராக நன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்து பீல்டிங்கும் படு மோசம்! மைக்கேல் லம்ப் 2 கேட்ச்களை கோட்டை விட்டார். ஒன்றை சிக்சருக்கு தள்ளிவிட்டார். அதிரடி வீரர் டாம் கூப்பர் 4 ரன்களில் இருந்தபோது அலெக்ஸ் ஹேல்ஸ் மிக மோசமாக கேட்சை தவறவிட்டார். பீட்டர் போரன் ரன் அவுட் ஆகியிருக்கவேண்டியது ஜோஸ் பட்லர் தவற விட்டார்.
 
தான் விளையாடிய காலத்தில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசி 'நெகடிவ் பவுலிங்' போடுவதற்கு பிரபலமான ஆஷ்லி ஜைல்ஸ் இப்போது இங்கிலாந்து கோச். இவரைப்போய் கோச்சாக தேர்வு செய்வதிலிருதே இங்கிலாந்து பற்றி நமக்கு தெரிகிறது.
 
இவரது பந்து வீச்சை சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை பள்ளிச்சிறுவர்களின் பந்து வீச்சிற்கு ஒப்பிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.
 
இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியை தவிர நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையில் சிறந்த அதிரடியை நமக்கு பரிசாக வழங்கியுள்ளது. முத்தாய்ப்பாக கித்தாய்ப்பு இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்ததும் மறக்க முடியாது.