வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2015 (14:20 IST)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஜாகீர்கான்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜாகீர்கான் அறிவித்துள்ளார்.


 
 
ஜாகீர்கான் ஒய்வு குறித்து பிசிசிஐ துணைத்தலைவர்  ராஜீவ் சுக்லா தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து  ஜாகீர்கான்  ஓய்வு பெறுகிறார். தனது ஓய்வு முடிவை அவர் இன்று அறிவிப்பார்" என்று சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜாகீர்கான் 2000ஆம் ஆண்டில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 37 வயதான ஜாகீர்கான் கடைசியாக 2014ஆம் ஆண்டு நியூசிலாந்து எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 
92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், 200 ஒரு நாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

மேலும், 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர்கான் 17 விக்கெட்களை மட்டும் கைப்பற்றியுள்ளார்.