Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனி இஸ் பேக்: யுவராஜ் சிங் பெருமிதம்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:14 IST)
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் இனி பயமில்லாத தோனியை கிரிகெட் களத்தில் காணலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

 
 
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி, தோனி தலைமையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
 
இங்கிலாந்து அணி தற்போது மும்பையில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோனி கடைசியாக கேப்டன் பொறுப்பில் களமிறங்கவுள்ளார். இதில் யுவராஜ் சிங்கும் சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் பங்கேற்கிறார்.
 
இதுகுறித்து யுவராஜ் சிங், தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது சரியான முடிவு. அவர் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார். தோனி தற்போது எந்த பொறுப்பிலும் இல்லாத காரணத்தினால் அவரது பயமில்லாத ஆக்ரோஷமான ஆட்டத்தை காண முடியும். நானும் எனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :