வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (16:17 IST)

யுஹான் ஓபன் டென்னிஸ் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

சீனாவின் நடைபெற்று வரும் யுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின், பெண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஈரானின் கேமலியா பெகு - மோனிகா நிகுலஷ்கூ ஜோடியை எதிர்க்கொண்டது.

இதில் சானியா ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கமேலியா – மோனிகா நிகுலெஸ்கு இணையை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக, சீனாவில் நடைபெற்ற குவாங்சூ ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சானியா - மார்டினா ஜோடி வென்றுள்ள 7-வது பட்டம் இது. அதில் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்கள் குறிப்பிடத்தக்கது. ஹிங்கிஸூடன் ஜோடி சேருவதால் சானியா தொடர்ந்து இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர்- ஒன் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். ஹிங்கிஸூடன் விளையாடும் போது தனக்கும் அவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதாக சானியா மிர்சா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.