இந்தியா படுதோல்வி அடைந்தது ஏன் ..? ரோஹித் சர்மா பேட்டி ...

rohit
Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (18:10 IST)
அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சென்று  விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு சுருண்டு படுமோசமானதோல்வியை சந்தித்தது. 
 
ஆட்டம் முடிவடைந்த பின்னர் ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது;
 
கிரிக்கெட்டில் இந்திய அணி நீண்ட நாள் கழித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.
 
மேலும் இந்திய அணி வீரர்கள் இதைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை கணித்தும், அதேசமயம் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்து வீசிய நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைப் பாராட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :