வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (20:02 IST)

சானியா மிர்சாவிடமிருந்து டென்னிஸ் விளையாட கற்றுக்கொண்ட மம்தா

கொல்கத்தாவில் நடந்த பயிற்சி டென்னிஸ் போட்டியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு  சானியா மிர்சா டென்னிஸ் விளையாட கற்று கொடுத்துள்ளார்.  


 


கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில் பயிற்ச்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது, சானியா மிர்சா மம்தா பானர்ஜிக்கு டென்னிஸ் ஆட கற்றுக் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சில நிமிடங்கள் டென்னிஸ் விளையாடி கொண்டு இருந்தனர். 

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்களுடன் சேர்ந்து டென்னிஸ் விளையாடியதில் எனக்கு கௌரவம் என்று பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
 
இதுகுறித்து சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதலமைச்சருடன் சேர்ந்து சில டென்னிஸ் பந்துகளை அடித்ததில் எனக்கு கௌரவம் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வந்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்