1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (12:28 IST)

விரட்டல் மன்னன் விராட் கோலி; பரிதாப தென் ஆப்பிரிக்கா - புள்ளிவிவரங்கள்!

இந்தியா நேற்று அரையிறுதியில் சற்றும் எதிர்பாராதவிதமாக 173 ரன்கள் இலக்கை சிறிதும் மனக்கிலேசமின்றி விரட்டல் மன்னன் விராட் கோலியின் அபார திங்க்கிங் கிரிக்கெட் மூலம் சுலபத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சில சுவையான புள்ளிவிவரங்கள் இதோ:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 169 ரன்களையே அதிகபட்சமாக துரத்தபப்ட்டுள்ளது. அந்த நியூசீலாந்து. இப்போது அந்த சாதனை காலி. இந்தியாதான் இப்போது T20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 170 ரன்களுக்கு மேல் எடுத்ததை சிறப்பாக விரட்டி வெற்றி கண்ட முதல் அணியாக உள்ளது.
 
தென் ஆப்பிரிக்கா 12 நாக்-அவுட் போட்டிகளில் அடையும் 10வது தோல்வியாகும் இது.
விராட் கோலியின் நேற்றைய 72 ரன்கள் அவரது 7வது T20 அரைசதம் துரத்தலில் 5வது. T20 கிரிக்கெட்டில் மட்டும் துரத்தலில் விராட் கோலி 496 ரன்களை 82.66 என்ற சராசரியில் வைத்துள்ளார்.
 
நடப்பு T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி 242 ரன்களை 121 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களை அடித்த வீராக திகழ்கிறார். இவருக்கு முன்பு நெதர்லாந்தின் டாம்கூப்பர் அதிகபட்சமாக இருந்தார். கம்பீர் 227 ரன்கள் எடுத்தார் எப்போது? 2007 T20 உலகக் கோப்பையில்.
 
டேல் ஸ்டெய்ன் நேற்று 3 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்தார். T20 கிரிக்கெட்டில் அவரது மோசமான பந்து வீச்சில் இது 2வது இடம் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.