கோலியை வாய்பிளக்க வைத்த நெஹ்ரா

Nehra
Abimukatheesh| Last Updated: வியாழன், 2 நவம்பர் 2017 (17:48 IST)
நேற்று நடைப்பெற்ற டி20 போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா அட்டகாசமாக செய்த பீல்டிங்கை பார்த்து விரட் கோலி வாவ் என மகிழ்ச்சியில் திளைத்தார்.

 

 
நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையே நேற்று நடைப்பெற்ற முதலாவது டி20 போட்டி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு கடைசி போட்டியாகும். இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. வெற்றியுடன் ஆஷிஷ் நெஹ்ரா விடைப்பெற்றார். 
 
போட்டியில் நெஹ்ராவின் அட்டகாசமான பீல்டிங்கை பார்த்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாவ் என மகிழ்ச்சியில் திளைத்தார். கீப்பரை தாண்டி சென்ற பந்தை நெஹ்ரா ஓடிவந்து கால்பந்து வீரர் போல் பந்தை காலால் தட்டி கையில் பிடித்து வீசியதை பார்த்து கோலி வாவ் என்றார்.
 
இதன் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. போட்டியின் பெஸ்ட் மொமண்டில் இதில் இடம்பெற்றது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :