Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமிக்ஞை மூலம் ஹர்திக் பாண்டியாவை வழிநடத்திய கோஹ்லியின் புத்திசாலித்தனம்

Last Modified செவ்வாய், 16 ஜனவரி 2018 (06:02 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஆறு விக்கெட்டுக்கள் மளமளவென விழுந்துவிட்டது. களத்தில் கேப்டன் கோஹ்லியும், ஹர்திக் பாண்டியாவும் இருந்தனர்.

இன்னும் ஒரு விக்கெட் விழுந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கோஹ்லி, ஹர்திக் பாண்டியாவை சரியான முறையில் வழிநடத்தி மேற்கொண்டு விக்கெட் விழாமல் காப்பாற்றினார்

குறிப்பாக அவுட் ஸ்விங், இன் ஸ்விங் பந்துகளை ஹர்திக் பாண்டியாவால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் சமிக்ஞை மூலம் அவுட் ஸ்விங் பந்து எது? இன் ஸ்விங் பந்து எது என்பதை ஹர்திக் பாண்டியாவுக்கு சுட்டிக்காட்டினார். அதாவது விராத் தனது பேட்டை இடது கையில் வைத்திருந்தால் அது அவுட் ஸ்விங் என்றும், வலது கையில் வைத்திருந்தால் இன் ஸ்விங் என்றும் பாண்டியாவுக்கு சமிக்ஞை காட்டினார்.

இந்த சமிக்ஞையின் உதவியால் ஹர்திக் பாண்டியா விளையாடியதால் விரைவாக ரன் எடுக்கவும், மேலும் விக்கெட் விழுவதை தடுக்கவும் இந்திய அணியா முடிந்தது. தகுந்த சமயத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்ட விராத் கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :