வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (22:16 IST)

உலகின் மதிப்புமிக்க வீரர்களில் விராட் கோலி 6ஆவது இடம்

ஸ்போர்ஸ் ப்ரோ என்ற பத்திரிக்கை உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 6 வது இடத்தை வழங்கியுள்ளது.
 
இங்கிலாந்தை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் ப்ரோ என்னும் பத்திரிக்கை உலகின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை கனடாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஏகினி பௌசார்ட் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு விம்பிள்டென் போட்டியில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றிருந்தார்.
 

 
அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும், பிரபல கோல்ஃப் வீரர் ஜோர்டான் ஸ்பீத் ஆகியோரும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 6 வது இடத்தை வழங்கியுள்ளது. அதேபோல, இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் 44 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே. இவருக்கு 45ஆவது இடத்தை வழங்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.