கோலியின் புத்தம் புதிய ஆடி கார் ! ஆச்சர்யப்பட வைக்கும் விலை !

Last Modified திங்கள், 20 ஜனவரி 2020 (14:29 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாங்கியுள்ள புதிய ஆடி க்யு 8 காரின் விலை 1.33 கோடி ரூபாய் ஆகும்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கும் கார்களையும் நேசிப்பவர்.  மிகத் தீவிரமான கார் பிரியரான அவர் விதவிதமான பல கார்களை வாங்கி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பவர். இந்நிலையில் இப்போது புதிதாக ஆடி நிறுவனத்தின் க்யூ 8 என்ற புதிய மாடல் காரை அறிமுகமான மூன்றாம் நாளே அவர் வாங்கியுள்ளார்.

இந்தியாவிலேயே இந்த காரை வாங்கியுள்ள முதல் நபர் கோலிதான் என்பது அதன் சிறப்புகளில் ஒன்று. ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த காரின் விலை 1.33 கோடி ரூபாய்.இதில் மேலும் படிக்கவும் :