வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:29 IST)

4 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார் செரீனா வில்லியம்ஸ்

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆகஸ்ட் 25, அன்று தொடங்கி செப்டம்பர் 8, வரை நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

3 ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், தனது நாட்டைச் சேர்ந்த லெப்சென்கோவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் செரீனா 6–3, 6–3 என்ற நேர்செட்டில் வென்று 4 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்காவின் சேமை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6–3, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் வென்று 4 ஆவது சுற்றுக்குத் தகுதிப் பெற்றார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, ரஷிய வீரர் ஆந்த்ரேவிடம் மோதினார். இதில் ஆண்டி முர்ரே 6–1, 7–5, 4–6, 6–2 என்ற நேர் செட்டில் ரஷிய வீரர் ஆந்த்ரேயை வென்றார்.

இத்தாலியின் பினாவியா பெனாட்டா, அமெரிக்காவின் நிகோலி கிப்சை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் பினாவியா பெனாட்டா 6–4, 6–0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.

செக்குடியரசின் பெட்ரோ கிவிட்டோவா, செர்பிய வீராங்கனை குருனிக்கிடம் அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்தார். இதில் 4–6, 4–6 என்ற நேர்செட்டில் குருனிக்கிடம் சரண் அடைந்தார்.

மேலும் இரட்டையர் பிரிவில் சானியா-காரா ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் கரோலின் கார்சியா-மோனிகா நிகல்ஸ் ஜோடியை வென்றது.