Widgets Magazine

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா தோல்வி: உருகுவேயிடம் சரண்

Last Modified செவ்வாய், 26 ஜூன் 2018 (07:03 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தி வரும் ரஷ்யா, நேற்றைய போட்டியில் உருகுவே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ரஷ்ய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடியபோதிலும் உருகுவே அணியிடம் 0-3 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது
நேற்றைய போட்டியில் உருகுவே அணியின் சுவாரஸ் 10வது நிமிடத்திலேயே கோல் அடித்து ரஷ்யாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து 23வது நிமிடத்தில் டெனி ஷெர்சேவ் என்பவர் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதியின் முடிவில் உருகுவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது

இந்த கோல்களை சமன்படுத்த ரஷ்ய வீரர்கள் முயற்சித்தும் உருகுவே அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஆட்டத்தின் 90வது நிமிடத்தின் உருகுவே அணியின் எடின்சன் இன்னொரு கோல் அடித்ததால் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் ஏ பிரிவில் உருகுவே அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :