செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (13:04 IST)

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோலாகல துவக்கம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் ஐ.பி.எல். பாணியில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.


 
 
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், காஞ்சி வாரியர்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
 
முதல் நாளான நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதின. 
 
தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. நடிகர் மாதவன், நடிகை ஆன்ட்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நடிகை ஸ்ரேயா மற்றும் தன்ஷிகா அசத்தலாக நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினர். நடிகர் தனுஷ் மைதானத்தில் வலம் வந்து உற்சாகப்படுத்தினார். இறுதியில் வாணவேடிக்கையும் நடந்தது. 
 
இதைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சிக்சருடன் அரைசதத்தை கடந்து அமர்க்களப்படுத்திய தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் தூத்துக்குடி அணி சவாலான ஸ்கோரை எட்டியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 
 
பின்னர் 165 ரன்கள் இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேப்பாக் அணியை 45 ரன் வித்தியசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றது.