Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்தில் டான்ஸ் ஆடும் கோலி: கவாஸ்கர் விமர்சனம்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 5 மார்ச் 2017 (13:22 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் டெஸ்ட் தொடரில், வழக்கத்தை விட கோலி வித்தியாசமாக செயல்படுவதாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்தது. இதில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.
 
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களுருவில் நடக்கிறது. இதிலும் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. 
 
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் நிதானத்தை கையாள வேண்டும். அவர் மனநிலை திடமாக இருந்தாலும், டெக்னிக்கில் கோட்டைவிடுகிறார். இதை சுலபமாக சரி செய்து விட முடியும். கோலி இதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :