வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (13:10 IST)

20 ஓவரில் டக்வொர்த்தா? இது ஓவரா இல்ல: ஸ்டீபன் பிளமிங்!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. மழையின் குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 48 ரன் இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், ரைசிங் புனே அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
 
ஒரு நாள் போட்டியில் (100 ஒவர்) டக்வொர்த்- லீவிஸ் விதி திருப்திகரமாக இருக்கும். 20 ஓவர் போட்டிக்கு (மொத்தம் 40 ஓவர்) சரியாக இருக்காது. இது தவறான அணுகு முறை என தெரிவித்துள்ளார்.