இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை: தெறிக்கவிடும் இந்திய வீரர்கள்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:04 IST)
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிரது. இந்த டெஸ்ட் தொடரில் இன்னிங்ஸ் தோல்சியை தவிர்க்க இலங்கை போராடி வருகிறது.

 
 
முதல் இன்னிங்சில் இந்தியா அணி 487 ரன் குவித்தது. தவான் மற்றும் ஹர்த்திக் பாண்ட்யா அதிரடி சதங்களை விளாசினர். ஆனால், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து பாலோஆன் ஆனது. 
 
பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2 வது இன்னிங்சை தொடங்கியது. பின்னர் இன்று 3 வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராடி வருகிறது.
 
ஆனால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய வெற்றி பெறுவதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :