20 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்கள்: இங்கிலாந்தை சுருட்டிய தென்னாப்பிரிக்கா


sivalingam| Last Updated: செவ்வாய், 30 மே 2017 (12:16 IST)
ஒருபக்கம் ஐசிசி கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.


 


டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 20 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து ஒருகட்டத்தில் இங்கிலாந்து தத்தளித்து கொண்டிருந்தது. ஒருவழியாக 31.1 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 28.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :