Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தையை கேட்டால் சிரிப்பீங்க; தவான்

Dhoni
Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (15:50 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தையை கேட்டால் சிரிபீங்க என தவான் கூறியுள்ளார்.

 

 
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் தவான் அண்மையில் நடைப்பெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகினார். மனைவிக்கு அறுவை சிகிச்சை காரணமாக தாமாக முன்வந்து விலகினார். தற்போது நடைபெற உள்ள டி20 போட்டியில் அவர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தை குறித்து கூறினார். அவர் கூறியதாவது:-
 
தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தையை கேட்டால் சிரிப்பீங்க. தோனி எப்போது தும்மினாலும், கடவுளே என் அருகில் இருப்பவரை உன்னுடன் கூட்டிச் செல், என்னை மட்டும் விட்டுவிடு என்பார். இதனால் நாங்கள் அருகில் நிற்கவே பயப்படுவோம் என்றார்.
 
தோனி தற்போது இந்திய அணியில் ஒரு சீனியர் வீரர். அனுபவம் வாய்ந்த் வீரர் என்பதை தாண்டி முன்னாள் கேப்டன். இவர் தற்போது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த ஆலோசனை வெற்றிக்கரமாக செயல்படும் போது இளம் வீரர்கள் தோனியை அவ்வப்போது பாராட்டுவது உண்டு.
 
தோனி பற்றி யாராவது ஒருவர் எப்போதும் அவரை பற்றி பேசிக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :