Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியை கலாய்த்த புனே அணி ஓனருக்கு பதிலடி கொடுத்த சாக்சி


sivalingam| Last Modified செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (22:32 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, அந்த அணி தடை செய்யப்பட்டதும் புனே அணியின் கேப்டனானார். ஆனால் இந்த வருடம் புனே அணியின் உரிமையாளர் தோனியை கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டது. அதுமட்டுமின்றி அந்த அணியின் உரிமையாளரின் சகோதரர் ஹர்ஸ் கோயின்கா தனது டுவிட்டரில் தோனியை மட்டம் தட்டும் வகையில் பதிவுகளை செய்து வருகிறார்


 


இதற்கு தோனியின் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் தற்போது தோனியின் மனைவி சாக்சி அதிரடியாக களமிறங்கி தோனியை மட்டம் தட்டியவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: பறவை உயிருடன் இருக்கும் போது, எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்த பின் எறும்புகள் அதை சாப்பிடும். நேரமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறும். அதனால் வாழ்க்கையில் யாரையும் காயப்படுத்த வேண்டாம். நீங்கள் இன்று பலமுடன் இருக்கலாம். ஆனால் காலம் உங்களை விட மிக வலிமையானது. ஒரு மரம் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். ஆனால், ஒரே ஒரு தீக்குச்சி கோடிக்கணக்கான மரங்களை எரித்துவிடும் திறமை கொண்டது. அதனால் நல்லவராக இருக்க வேண்டும் நல்லதை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சாக்சியின் இந்த பதிலடிக்கு பின்னர் தற்போது ஹர்ஸ் கோயின்கா கப்சிப் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :