1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:12 IST)

சச்சினின் மகள் சாரா திரையுலகில் அறிமுகமாகிறா?

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சினின் மகள் சாரா விரைவில் திரையுலகில் அறிமுகம் ஆக போகிறார் என தெரிகிறது.
சதத்தில் சதம் கண்ட இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகும். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சச்சினின் மகள் சாரா திரையுலகில் பிரவேசிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மேலும் சாராவிற்கு ஜோடியாக சாகித் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது சாரா திருபாய் அம்பானி பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.