இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட்: புஜாரா சதம், நிதான ஆட்டத்தில் இந்திய அணி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 18 மார்ச் 2017 (15:02 IST)
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 

 
 
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 
 
பின்னர் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 
 
இன்று முரளி விஜய்- புஜாரா ஜோடி ஆட்டத்தை துவங்கியது. பொறுப்பாக ஆடிய முரளி விஜய், 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து 3 வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி ஆட்டமிழந்தார்.
 
தற்போது இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 112 ரன்களுடனும், கருண் நாயர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :