கோவை கிங்ஸ் அணியை கொலைவெறியுடன் தோற்கடித்த தூத்துக்குடி


sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (06:31 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று கூறப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது சுவாரஸ்ய கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட் அணி எளிதில் வீழ்த்தியது.


 
 
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தூத்துக்குடி அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
28 பந்துகளில் 47 ரன்கள் அடித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தூத்துக்குடி அணி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :