சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய படுதோல்வி

i

sivalingam| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:28 IST)
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 338 ரன்கள் குவித்தது. ஃபேக்கர் ஜமான் 114 ரன்களும் அசார் அளி 59 ரன்களும் அடித்தனர்.

339 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் சர்மா அவுட் ஆனார். பின்னர் 3வது ஓவரில் கேப்டன் கோஹ்லி, 9வது ஓவரில் தவான், 13வது ஓவரில் யுவராஜ்சிங், 14வது ஓவரில் தோனி என ஐந்து முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். ஓரளவு அடித்து ஆடி வந்த பாண்டியாவை ஜடேஜா ரன் அவுட் ஆக்கியதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.


இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஷிப் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :