Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் பயிற்சி?

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (15:56 IST)
ராகுல் டிராவிட்டின் பயிற்சியால் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் யு-19 உலக்கோப்பை போட்டியில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ரமீஸ் ராஜா கூறியதாவது, இளம் இந்திய வீரர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிடின் பங்கை கண்டு வியக்கிறேன். பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை.
இந்திய வீரர்களில் சிலர் காட்டிய பொறுமை என்னைக் கவர்ந்தது. ஷுப்மன் கில் என்ற புதிய திறமை வெளிவந்துள்ளது. இவர்களை தயார்படுத்தி வளர்த்தெடுத்த ராகுல் திராவிடுக்கு நிறைய பெருமைகள் சேர வேண்டும்.
ராகுல் திராவிடிடமிருந்து கிரிக்கெட் மட்டுமல்ல நிறைய விஷயங்களை இளம் வீரர்கள் கற்று கொள்கின்றனர். பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் திறமைகளை அமைப்பு ரீதியாக மாற்ற வேண்டியுள்ளது. இந்தியாவிற்கு எப்படி ராகுல் திராவிடுக்கு இந்த வாய்ப்பை வழங்கி பயனடைந்ததோ அப்படி பாகிஸ்தானுக்கு திராவிட் போலவே ஒருவர் தேவைப்படுகிறார் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :