வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (07:52 IST)

3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி: சமமானது தொடர்

3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி: சமமானது தொடர்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடர் சமமானது 
 
ஏற்கனவே ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்னொரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்தது
 
இதனை அடுத்து 191 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக முகமது ஆசிப் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் சென்ற பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த ஒரே வெற்றி இந்த வெற்றிதான் என்பது குறிப்பிடத்தக்கது