வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (18:52 IST)

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்: பயிற்சி ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகள் தொடக்கம்

பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு , ரியோ டி ஜெனிரோவில் நகரில் பயிற்சி ஹாக்கி மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.


 
 
இந்த பயிற்சி போட்டிகள் வரும் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பயிற்சி ஹாக்கிப் போட்டியில் பிரேசில், மெக்ஸிகோ, சிலி, பெரு, பராகுவே, வெணிசுலா, டிரினிடாட் அண்ட் டொபாகோ நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
 
இதேபோல், பேட்மிண்டன் பயிற்சி போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் 24 நாடுகளில் இருந்து 56 வீரர்களும், 34 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தரப்புள்ளிகளுக்கான இந்தப் போட்டியில் உலக பேட்மிண்டன் முன்னணி வீரரான சீனாவின் லின் டானும் விளையாடி வருகிறார். 
 
2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஒத்திகையாக இந்த பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. பிரேசிலில் சில நாட்களுக்கு முன் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கு அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தவதற்கான பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியது. இதுகுறித்து பதில் அளித்த ரியோ டி ஜெனிரோ மேயர் எடுவார்டோ பயஸ், ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.