வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (12:11 IST)

தற்கொலைக்கு முயன்ற மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ரியோ ஒலிம்பிக் கனவை இழந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தற்கொலைக்கு முயற்சித்தாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 
 
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.
 
இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது தெரியவந்தது.
 
இதனால் நர்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறிய அவரது நண்பர், நரசிங் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை எட்டினார். ஆனால் அவர் இந்த முறையில் அவமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த நரசிங் யாதவ் தற்கொலை செய்யும் முடிவுக்கே சென்றுவிட்டார் என கூறினார்.