வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (11:25 IST)

கணவர் ஷோயப் மாலிக்குடன் கருத்து வேறுபாடு இல்லை - சானியா மிர்சா!

பாகிஸ்தானில் உள்ள கணவர் ஷோயப் மாலிக் வீட்டிற்குச் சென்றுள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கணவர் ஷோயப் மாலிக்குடன் மனக்கசப்பு ஏற்பட்டதாக வந்துள்ள செய்திகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து கடுமையாக அதனை மறுத்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
 
எங்களது திருமண வாழ்க்கை எளிதானது அல்ல. ஏனெனில் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த, தொழில்முறை விளையாட்டு வீரர்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காது என்பதை அறிவேன். ஆனால் இதுவரை அந்த நிலைமையை முடிந்தவரை சிறப்பாக கையாண்டு வருகிறோம். எங்களுக்குள் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. 

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாலும், சோயிப் மாலிக்கை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கட்ட போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு கணவருடன் ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்வதற்காக மாமனார் வீடு உள்ள சியல்கோட்டுக்கு (பாகிஸ்தான்) வந்துள்ளேன். 
மீடியாக்களின் தொந்தரவு இல்லாததால் இங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். ஆசை தீர சாப்பிடுகிறேன். ஷாப்பிங் சென்று மனதுக்கு பிடித்ததை வாங்குகிறேன். ஒரு முறை கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடைக்காரருக்கு முதலில் நான் சானியா தானா? என்று ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு எனது கணவருடன் என்னை பார்த்த பிறகு, அடையாளம் கண்டு என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இடையிலான ஆட்டதை இங்கிருந்து டி.வி.யில் பார்த்தேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். 
ஆனால் கடைசியில் அது இலங்கைக்குரிய நாளாக அமைந்து விட்டது. சோயிப் மாலிக் தொடர்ந்து முன்னிலை வீரராக நீடிக்க வேண்டும், மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்தித்திக்கிறேன்.
 
இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.